நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் தரப்பு பங்கேற்கும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வர வேண்டுமென பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என்ன முடிவெடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார். அதில், பொதுக்குழுவுக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மேலும், “ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக் கொள்ளலாம்” எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அண்மைச் செய்தி: ‘மனைவியைக் கொலை செய்து நாடகமாடிய கணவன்’
பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பாரா?https://t.co/WciCN2AH8n | @AIADMKOfficial | @AIADMKITWINGOFL | @OfficeOfOPS | @EPSTamilNadu | #Vaithilingam | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/kKH8Fh6hZq
— News7 Tamil (@news7tamil) June 22, 2022
இந்நிலையில், அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்குத் தடை கோரிய வழக்கு இன்று மதியம் 3 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தச்சூழ்நிலையில், நாளை நடைபெறும் பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் தரப்பு பங்கேற்கும் எனவும், ஓ.பி.எஸ் பங்கேற்பாரா என்பது குறித்து மாலை நீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகு முடிவெடுக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.