”நாங்கள் போர்க்குணம் கொண்டவர்களாகவும் மாறுவோம்”- கனிமொழி எம்.பி!

திமுகவை ஓரங்கட்டி விட வேண்டும் என்று அதிமுக அரசு நினைத்தால், நாங்கள் இன்னும் போர்க் குணத்தோடு அதிமுகவை எதிர்த்து நிற்போம் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ’விடியலை நோக்கி’ திமுக…

திமுகவை ஓரங்கட்டி விட வேண்டும் என்று அதிமுக அரசு நினைத்தால், நாங்கள் இன்னும் போர்க் குணத்தோடு அதிமுகவை எதிர்த்து நிற்போம் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ’விடியலை நோக்கி’ திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ’அதிமுக அரசு திமுகவை அடக்கி விட வேண்டும், ஓரங்கட்டி விட வேண்டும், பயமுறுத்தி விட வேண்டும் என்று நினைத்தால், நாங்கள் இன்னும் போர்க் குணத்தோடு உங்களை எதிர்த்து நிற்போம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இந்த தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக அமைதியான தேர்தலாக நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் ஆசை என்றும் கூறியுள்ளார்.

’நீங்கள் எங்களது கூட்டத்தில் வந்து பிரச்சனை செய்ய வேண்டும் என்று நினைப்பீர்களானால் யாரும் தெருவில் இறங்கிப் போக முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக கனிமொழி சுட்டிக்காட்டினார். ஆனால் அமைதியாக இருக்கக் கூடிய நாங்கள் போர்க் குணம் கொண்டவர்களாகவும் மாறுவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply