சேலத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொரோனா தொற்று பரிசோதனை தீவிரமடைந்துள்ளது.
மார்ச் மாதத்திற்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மற்ற மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகளிலும் பரிசோதனை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.







