சசிகலாவிற்கு நிமோனியா பாதிப்பு; மருத்துவமனை அறிக்கை!

சசிகலா நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில், காய்ச்சல்…

சசிகலா நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக விக்டோரியா அரசு மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா தீவிர நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply