கனிமொழிக்கு கொரோனா தொற்று!

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. மேலும் நாளை இரவு 7 மணியுடன் அனைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொள்ள…

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. மேலும் நாளை இரவு 7 மணியுடன் அனைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்திள்ளது.

இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கிச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது தேர்தல் பரப்புரையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னை, சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.