ஐபிஎல் தொடர் 2026-ன் லீக் போட்டிகள் முடிவடைந்து விட்டன. அடுத்ததாக ப்ளேஆஃப் போட்டிகள் நாளை தொடங்குகிறது. அதன் படி நாளை நடைபெறும் முதல் தகுதி சுற்று போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து அணி வீரரான பில் சால்ட் நடப்பு சீசனில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஆறு போட்டிகளில் விளையாடிய அவர் 202 ரன்கள் குவித்துள்ளா. ஆனால் கை விரலில் ஏற்பட்ட காயம் அவர் அடுததடுத்த போட்டிகளில் விளையாட வில்லை.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சால்ட் களமிறங்குவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் “சால்ட் உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் கண்காணிப்பில் உள்ளார். ஆனால், எங்கள் ஆடும் லெவனை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆடுகளத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் முடிவு செய்வோம்” என்று கூறியுள்ளார்.




