ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதய கோளாறு காரணமாக கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து குடியரசுத் தலைவருக்கு கடந்த 30ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன்னுடைய உடல்நிலை முன்னேறி வருவதாகவும், சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நேற்று அறிக்கை வெளியிட்டார் குடியரசுத் தலைவர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து அவருடைய உடல்நிலையை கண்காணித்து, அவரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.