சீனாவைச் சேர்ந்த டெலிவரி பாய் ஒருவர் தனது இரண்டு வயதுடைய பெண் குழந்தையுடன் சேர்ந்து டெலிவெரி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவைச் சேர்ந்த டெலிவரி பாய் ஒருவர் தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் சேர்ந்து டெலிவரி செய்வது போன்ற வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகப் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தையின் தந்தை “தன் பெண் குழந்தையுடன் சேர்ந்து வேலை செய்வது தனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது எனவும் தனக்கு ஒரு சிறந்த துணையாக அவள் இருந்து வருகிறாள்” எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் 80,000 பார்வையாளர்களைக் கடந்து பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுபற்றி சீன ஊடகம் “தி சவுத் மார்னிங்” இல் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் ஃபெர்ரீஸ் என்ற 2 வயதான பெண் குழந்தை ஒன்று ஒரு சிறிய பெட்டியிலிருந்தபடி தினமும் தன் தந்தையுடன் சேர்ந்து பயணித்துவருகிறாள். இந்த குழந்தை பிறந்த 6 மாதத்திலிருந்தே தன் தந்தையுடன் சேர்ந்து இந்த வேலையில் பயணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் குழந்தை தினமும் தனது தந்தையுடன் பயணித்து வருவது அவரை உற்சாகப் படுத்தும் விதமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த குழந்தையின் தாய் தந்தையர் கறி மார்க்கெட்டில் வேலைபார்த்து வருகின்றார். குழந்தை ஃபெர்ரீஸ் காலை நேரங்களில் தனது தந்தை லீ யுடனும் நேரத்தைச் செலவிட்டும், மதிய நேரத்தில் தனது தாயுடன் நேரத்தைச் செலவிட்டும் வருகிறாள். மேலும் இவர்கள் மூவரும் வாழும் வீடு வெறும் 107 சதுர அடி என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது தாய் தந்தையினர் ஏழ்மையில் வாடினாலும் குழந்தை இருவரிடமும் சேர்ந்து சமமாக பயணிப்பது அவர்களிடத்தில் ஒரு ஆறுதலாக இருந்து வருகிறது என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.