காஞ்சிபுரத்தில் நேற்று நள்ளிரவு முதல் நீடித்த மழை காலையிலும் இடைவிடாததால் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவியர் கடும் அவதிக்குள்ளாகினர். மழையில் குடை பிடித்தப்படியே பள்ளிகளுக்கு சென்றனர்.
தமிழகத்தில் தற்போது படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைய துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவ மழை ஆரம்பிப்பதற்கான சாதகமான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு துவங்கிய மழை காலை வரையிலும் இடைவிடாது தூறிக் கொண்டே இருந்தது. மழை காரணமாக மாவட்டத்திலுள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பலர் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால் மாவட்ட நிர்வாகம் தரப்பில் பள்ளி,கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் உத்திரமேரூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ,மாணவியர் சுமார் 10 கி.மீ.தூரம் வரையிலும் மழையில் நனைந்தப்படியே பள்ளிக்கு வந்தனர்.இதனால் மாணவ,மாணவியர் மற்றும் அவரது பெற்றோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
—வேந்தன்