காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை என்னும் இடத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் தீக்காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது, தீக்காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
11 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இவர்களில் ஐந்து நபர்கள் 100% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இதுவரை பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசு தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்