ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேஷாசலம் வனப்பகுதியில் , செம்மரங்களை வெட்டிய இரண்டு பேர் அதை திருப்பதி
வழியாக சென்னைக்கு காரில் கடத்தி வந்தனர். இது பற்றிய தகவல் அறிந்த நாராயணவனம் போலீசார், திருப்பதி-சென்னை வழித்தடத்தில் உள்ள புத்தூர்
அருகே அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் 25 செம்மர
கட்டைகள் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் , காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடிய நிலையில், கார் ஓட்டுநரான
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மருதுசாமி , வேலுசாமி என்பவரை
கைது செய்த போலீசார் , காருடன் செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், காரில் இருந்து தப்பி ஓடிய நபர் சேஷாசலம் வனப் பகுதியில் , செம்மரங்களை
வெட்டி கடத்தி சென்னையில் இருக்கும் முக்கிய கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்வதில் கை தேர்ந்தவர் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.
—கு.பாலமுருகன்