“டியர் தம்பி, சாரி தம்பி சார்”: சூர்யாவுக்கு ட்விட்டரில் கமல் பதில்

விக்ரம் படம் குறித்து ‘கனவு நனவாகிவிட்டது’ என்ற நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவிற்கு கமல்ஹாசன் பதிலளித்து பதிவிட்டுள்ளார்.  உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே…

விக்ரம் படம் குறித்து ‘கனவு நனவாகிவிட்டது’ என்ற நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவிற்கு கமல்ஹாசன் பதிலளித்து பதிவிட்டுள்ளார். 

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் சூர்யாவின் நடிப்பை அனைத்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். அவருடைய தோற்றமும், உடல்மொழியும் மிகுந்த கவனத்துக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்றது? உங்களுடன் திரையில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது. இதனை செய்துகாட்டிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. இத்தனை அன்பைப் பார்க்கும்போது வியப்படைகிறேன்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவின் பதிவிற்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது நீண்டநாட்களாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். உங்களிடம் அன்பு ஏற்கனவே இருந்தது. தற்போது அது மக்களிடமும் அதிகரித்துள்ளது. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் தம்பி, சாரி தம்பி சார்” எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.