விக்ரம் படம் குறித்து ‘கனவு நனவாகிவிட்டது’ என்று நடிகர் சூர்யா ட்விட்டரில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் சூர்யாவின் நடிப்பை அனைத்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். அவருடைய தோற்றமும், உடல்மொழியும் மிகுந்த கவனத்துக்குள்ளாகி உள்ளது.
https://twitter.com/Suriya_offl/status/1532976128058482688
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்றது? உங்களுடன் திரையில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது. இதனை செய்துகாட்டிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. இத்தனை அன்பைப் பார்க்கும்போது வியப்படைகிறேன்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.







