ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு தருவதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
ஒன்று கூடுவோம் @mkstalin வென்று காட்டுவோம் @EVKSElangovan #தமிழ்நாடு வாழ்க! https://t.co/6Sy4daxB5f
— Kamal Haasan (@ikamalhaasan) January 25, 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “ஒன்று கூடுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வென்று காட்டுவோம் ஈவிகேஎஸ் இளங்கோவன். #தமிழ்நாடு வாழ்க!” என்று பதிவிட்டுள்ளார்.