குடியரசு தினத்தை முன்னிட்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கையும்
இசையமைப்பாளருமான இஷ்ரத் காதரி “எந்தையும் தாயும் – வந்தேமாதரம்” எனும் பாடலை வெளியிட்டுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தங்கையும்
இசையமைப்பாளருமான இஷ்ரத் காதரி இசையமைத்து பாடிய மகாகவி
பாரதியார் எழுதிய “எந்தையும் தாயும் – வந்தேமாதரம்” பாடல் இன்று
வெளியாகி உள்ளது .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தனது நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார். மேலும் இப் பாடலை தன் தாய் நாட்டிற்காக உருவாக்கியதில் பெறு மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் கூறினார்.
இப்பாடலில் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மத நல்லிணகத்தை வலியுறுத்தும் விதத்தில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
பாரதியார் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட பாடலை இஷ்ரத் காதரி இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலை இயக்குனர் மாதேஷ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு ஒளிப்பதிவாளர் குருதேவ் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்சஸ் 11 நிறுவனம் இந்த பாடலை தயாரித்துள்ளது. நாட்டுப்பற்றுமிக்க இப்பாடலின் முதல் பிரதியை திமுக வின் துணை பொதுச் செயளாலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
– யாழன்