தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி குருநானக் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வணிகவியல் மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா அதிகரிப்பது குறித்து ஆட்சியர்களுக்கு நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 15-ஆம் தேதி 22 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை, நேற்று 144 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி கல்லூரியில் நேற்று 2 பேருக்கு தொற்று உறுதியானது, இந்நிலையில் இன்று 29 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதே நிலை தொடர்ந்தால் கொரானா எண்ணிக்கை 200-ஐ தாண்டும் என எச்சரித்த அவர், தமிழ்நாட்டில், குடும்பங்களுக்குள் க்ளஸ்டர் முறையில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியுள்ளது எனவும், கடந்த வாரத்தில் உருமாறிய ஒமைக்ரான் உள்வகையான Pa4 மற்றும் Pa5 பரவியது என குறிப்பிட்ட அவர், உருமாறிய கொரானாவில் டெல்டா போன்ற நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் தரும் செய்தியாக இருந்தாலும், வேகமாக பரவி வருவதாக குறிப்பிட்ட அவர், தொண்டை வலி அதிகரிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இந்தியாவில் மீண்டும் உருமாறிய ஒமைக்ரான் உள்வகை பரவ தொடங்கியுள்ளதால், மூடிய அறைகளுக்குள்ளும் முகக் கவசம் அவசியம் எனவும், தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கூறிய அவர், தமிழ்நாட்டில் 41 லட்சம் பேர் முதல் தவணையே செலுத்தவில்லை என குறிப்பிட்டார். மேலும், அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பரவல் இந்தியளவில் ஏறுமுகமாக உள்ளது, தமிழ்நாட்டில் மிதமான வேகத்தில் கொரோனா அதிகரிப்பதும் உண்மை என தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘உக்கார வேற இடமே இல்லையா?… ரயில் என்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபர்’
தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு கோவை ஆகிய 5 மாவட்டங்களில் நாள்தோறும் தொற்று பதிவாகி வருவதாகவும், 12 மாவட்டங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் தொற்று பதிவாகி வருவதாக கூறிய அவர், தற்போதுவரை மூன்று அலைகளை வென்றாலும் அரசுக்கு தப்போதையை சூழலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 1.17 லட்சம் படுக்கைகள் சிகிச்சைக்காக தயாராக உள்ளது. தற்போது 55 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதில், ஐசியூவில் 7 பேரும், ஆக்சிஜன் சிகிச்சையில் 17 பேரும் உள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








