ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 54-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். நாடு…

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 54-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அவருக்கு மாநில தலைவர்கள், அரசியல்  பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

https://twitter.com/ikamalhaasan/status/1670730323485937665?s=46

இந்நிலையில் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ”எனது நண்பர் ராகுல் காந்திக்கு மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் துன்பங்களை புன்னகையுடன் எதிர்கொண்டீர்கள், வெறுப்புக்கு அன்புடன் பதிலளித்தீர்கள். நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளைப் பெறுங்கள்.” என பதிவிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.