தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நில சீர்திருத்த துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ், எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை தொடர்ந்து, திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியராக இருந்த வீர் பிரதாப் சிங், வணிவரித்துறை இணை ஆணையராகவும், பட்டு வளர்ச்சி துறை இயக்குநராக இருந்த விஜய ராணி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் தலைவராக இருந்த விஜய குமார், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவராகவும், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத் தலைவராக இருந்த ஸ்வர்ணா, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மேலாண்மை இயக்குநராகவும் இருந்த ஆயிஷா மரியம், சிறுபான்மையில் நலத்துறை ஆணையராகவும், ஊரக வளர்ச்சி துறை இணைச் செயலாளராக இருந்த சந்திர சேகர் சாமூரி, பட்டு வளர்ச்சி துறை இயக்குனராகவும் நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக இருந்த கண்ணன், தமிழ்நாடு சிமென்ட் நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







