கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு உகந்ததல்ல என காவல்…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு உகந்ததல்ல என காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த வந்த மாணவி, கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை நியாயமாக இல்லை என்று குற்றம் சாட்டி மாணவியின் தாய் மனு தாக்கல் செய்தார்.

மேலும் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரியும் அதில் குறிப்பிட்டுள்ளார். வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்த போது, மாணவியின் தந்தை சிபிசிஐடி விசாரணை கோரி தாக்கல் செய்திருந்த மனு நிலுவையில் உள்ளதால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவியின் தாய் தாக்கல் செய்த மனுவை, ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.