வெளியாகிறது BTS-இன் முக்கிய உறுப்பினரான ஜிமினின் Solo Album ‘FACE’ – ரசிகர்கள் உற்சாகம்!

BTS இன் முக்கிய உறுப்பினரான ஜிமின் தனது முதல் தனி சோலோ ஆல்பனாப ஃபேஸை மார்ச் மாதம் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Jin, Jimin, RM, Suga, V, Jungkook மற்றும் J-Hope…

BTS இன் முக்கிய உறுப்பினரான ஜிமின் தனது முதல் தனி சோலோ ஆல்பனாப ஃபேஸை மார்ச் மாதம் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Jin, Jimin, RM, Suga, V, Jungkook மற்றும் J-Hope ஆகியவற்றை உள்ளடக்கிய தென் கொரிய இசைக்குழு BTS உலகளவில் மில்லியன் கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மற்றும் BTS ARMY என தனக்கு சொந்த ரசிகர்களைக் கொண்டுள்ளது.

பொதுவாக BTS உறுப்பினர்கள் ஒன்றாகவே ஆல்பங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால் பி.டி.எஸ் உறுப்பினர்கள் சமீப காலங்களில் தங்கள் தனி ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜிமினும் இதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். ஜிமின் தனது முதல் தனி ஆல்பமான ஃபேஸ் என்ற தலைப்பை மார்ச் 24 அன்று வெளியிடுவார் என்று பிக் ஹிட் மியூசிக் அறிவித்தது.

பிக் ஹிட் மியூசிக் வெவர்ஸில் உள்ள BTS ரசிகர்களுக்கு இவ்வாராக பகிர்ந்துகொண்டது. “ஹலோ, இது பிக்ஹிட் மியூசிக். BTS உறுப்பினர் ஜிமின் தனது முதல் தனி ஆல்பமான FACE ஐ வெளியிடுகிறார். FACE என்பது ஜிமின் தன்னை நேருக்கு நேர் எதிர்கொள்வதைப் பற்றியது. ஒரு தனி கலைஞராக அவர் தனது அடுத்த கட்டத்திற்குத் தயாராகிறார்.

https://twitter.com/bts_bighit/status/1628047190248796160?s=20

எனவே ஜிமினின் முதல் அதிகாரப்பூர்வ தனிச் செயலுக்கு உங்களின் தொடர்ச்சியான ஆர்வத்தையும் ஆதரவையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முன்கூட்டிய ஆர்டர் தேதி: காலை 11 மணி முதல் , புதன்கிழமை, பிப்ரவரி 22, 2023 (KST) வெளியீட்டுத் தேதி: மதியம் 1 மணி முதல், வெள்ளிக்கிழமை, மார்ச் 24, 2023 (KST). நன்றி.” என பிக் ஹிட் மியூசிக் வெவர்ஸ் BTS ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளது.

அண்மை செய்திகள்: நெட்ஃப்ளிக்ஸில் தொடர்ந்து டாப் 10 இடத்தில் துணிவு; உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக, BTS உறுப்பினர்களான RM, Suga, Jimin, Jin, Jungkook, V, மற்றும் Sugaவின் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் ஜூம் ஜோ பதான் மற்றும் பெஷாரம் ரங் ஆகியவற்றிற்கு நடனமாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.