முக்கியச் செய்திகள்தமிழகம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் ஜூன் 19 அன்று உயிரிழந்தனர். இதேபோல ஜூன் 20 அன்று மேலும் 19 பேர் இறந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் நேற்று (ஜூன் 21) உயிரிழந்தனர்.  இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 90 நபர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம்  பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 112 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.  இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் சந்திரா,  சூசை,  ரமேஷ் மற்றும் மதன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது” – மஜக தலைவர் தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு!

Web Editor

“எனக்கு தெரிந்த வரலாறு கூட உங்களுக்கு தெரியவில்லை” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

Web Editor

தொழிற்கல்வியை மேம்படுத்த 3 முறைகள் அமல்படுத்தப்பட உள்ளது – துணை வேந்தர் வேல்ராஜ்

Jeba Arul Robinson

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading