கலையுகம் எனும் கலை திருவிழா சென்னையில் நடைபெற்றது. இதன் மூலம் கலைகளுக்காகவும் , கலைஞர்களை மேம்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் அமைந்துள்ள ‘ஏரோஹப் கிழக்கு’ மாலில் சென்னை கிறித்துவ கல்லூரியில் படிக்கும் தகவல் தொடர்புத்துறை மாணவர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சார்பில் ‘கலையுகம்’ எனும் கலை திருவிழா- 2023 நடைபெற்றது.
தமிழ்நாட்டின் மறைந்து வரும் நாட்டுப்புறக் கலை வடிவங்களை மேம்படுத்த செய்யவும், காட்சிப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் அக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மாற்று ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிததனர்.







