காட்டூரில் கலைஞர் கோட்டம்: ஆர்வமுடன் செல்பி எடுக்கும் பொதுமக்கள்!

காட்டூரில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை முன்பு ஆர்வமுடன் பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர். திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட கலைஞர் கோட்டத்தில், வெள்ளை பளிங்குக்…

காட்டூரில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை முன்பு ஆர்வமுடன் பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர்.

திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட கலைஞர் கோட்டத்தில், வெள்ளை பளிங்குக் கற்களாலான கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதி நினைவுகளைப் போற்றக்கூடிய பழமையான புகைப்படங்கள், அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், உள்ளிட்ட பலவற்றை ஆர்வத்துடன் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

இதேபோல், வெள்ளை பளிங்கு கற்களால் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் திரு உருவ சிலை முன்பு நின்று, ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்தும் போட்டோ எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

—சௌம்யா.மோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.