குப்பை வண்டியில் மண்ணை ஏற்றிச் சென்ற ஊராட்சி நிர்வாகம்: அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!

குப்பை அள்ளும் வாகனத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற ஒப்பந்த ஊழியர், வாகனத்தின் டிப்பரில் தலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் புதிதாக குப்பை அள்ளுவதற்காக வழங்கப்பட்ட…

குப்பை அள்ளும் வாகனத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற ஒப்பந்த ஊழியர், வாகனத்தின் டிப்பரில் தலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் புதிதாக குப்பை அள்ளுவதற்காக வழங்கப்பட்ட மினி வாகனங்களில், கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மண் அள்ளிச்சென்று கொட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 21-வயதான விஜய் என்ற இளைஞர், கடந்த ஒரு மாதமாக ஒப்பந்த அடிப்படையில் கேளம்பாக்கம் ஊராட்சியில் மினி குப்பை வண்டி ஓட்டி வந்துள்ளார். குப்பை அள்ளும் வாகனத்தில் மண் அள்ளிச் சென்றதால் மண்ணை கொட்டிவிட்டு மீண்டும் வாகனத்தின் ஜாக்கியை கீழே இறக்கும்போது, தலை டிப்பரில் மாட்டிகொண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மண்ணை கொட்டிவிட்டு ஜாக்கி மூலம் டிப்பரை கீழே இறக்கும்போது விஜய் தலை அதில் மாட்டிகொண்ட வீடியோ வெளியாகி பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் உதவி ஆய்வாளர் ராகவன், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.