கைகோர்த்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன்; இணைந்து செயல்பட முடிவு என கூட்டாக பேட்டி

லட்சியத்தை அடைய இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டாக அறிவித்துள்ளனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில்,…

லட்சியத்தை அடைய இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென இன்று சந்தித்தார். அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவி தினகரனை சந்தித்தார். தன்னைக் காண வந்த இருவரையும், பொன்னாடை போர்த்தி டிடிவி தினகரன் வரவேற்றார். சுமார் அரை மணி நேர சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும். லட்சியத்தை அடைவதற்காக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். ஓபிஎஸ் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட அன்பு உண்டு. இருவரிடையே மனதளவில் பகை உணர்வு கிடையாது. இந்த இணைப்பில் சுயநலம் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி துரோகி; திமுக எதிரி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை கபளீகரம் செய்தவர்களிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக நானும் ஓபிஎஸ்ஸூம் இணைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : தோனியைப் போன்ற வீரர்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதோபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “சசிகலாவை சந்திக்க முயற்சித்தோம். அவர் வெளியூர் சென்றிருப்பதால் திரும்பி வந்தவுடன் நிச்சயம் சந்திப்பதாக கூறியிருக்கிறார். அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான முயற்சி தான் இந்த சந்திப்பு. அனைவரும் ஒன்றிணைந்து இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்பதனை திருச்சி மாநாட்டின் மூலமாக தொண்டர்கள் உணர்த்தினர். கிரிக்கெட் போட்டியை பார்க்கச் சென்றபோது மரியாதை நிமித்தமாக சபரீசனை சந்தித்தேன்; அது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. அதிமுகவை மீட்டெடுத்து திமுகவை ஓழிப்போம்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்த முழு வீடியோவைக் காண :

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.