முக்கியச் செய்திகள் தமிழகம்

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ககன்தீப் சிங் பேடி

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் பாலகங்கா, திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில்
கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் இருந்தனர்.

பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில், 16 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 40,54,038 பேர் எனவும் இதில், ஆண்கள் வாக்காளர் – 19,92,198 பேரும், பெண்கள் வாக்காளர் – 20,60,767 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் – 1073 பேரும் இருப்பதாக தெரிவித்தார்.

19.03.2021 அன்று வெளியிடப்பட்ட வாக்களர் பட்டியலில் மொத்த வாக்களர் எண்ணிக்கை 40,57,061 இருந்த நிலையில் தற்போது 40,54,038 வாக்காளர்கள் உள்ளனர். 22492 வாக்காளர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் 25,515 வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல, மதுரை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியீட்டார், நிகழ்வில் தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில், “மதுரை மாவட்டத்தில் 26,81,727 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை – 13,17,631. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை – 13,63,897. மூன்றாம் பாலினத்தர் எண்ணிக்கை – 199 என அவர் தெரிவித்தார்.”

நவம்பர் 30 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம், நவம்பர் – 13, 14, 27,28 ஆகிய நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் 2022 ஜனவரி 5-ல் வெளியிடப்படும் என்றார். 2021 மார்ச் மாத நிலவரப்படி 26,97,682 வாக்காளர்கள் இருந்தனர். இறப்பு, இடமாற்றம், ஒரு முறைக்கு மேலான பதிவு என 25,415 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வரைவு வாக்காளர் பட்டியலை விட இன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் 15,955 வாக்காளர்கள் குறைவு எனவும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.

தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதியில் 30,17,603 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்திற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார். நவம்பர் 1-ஆம் தேதி கணக்குப்படி 13 லட்சத்து 63 ஆயிரத்து 458 வாக்காளர்கள் உள்ளதாகவும், மாவட்டத்தில் 6 லட்சத்து 67 ஆயிரத்து 74 ஆண் வாக்காளர்களும் 6 லட்சத்து 96 ஆயிரத்து 271 பெண் வாக்காளர்களும் 113 மூன்றாம் பாலினத்த வாக்காளர்களும் உள்ளதாக தெரிவித்தார்.

மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை 7302 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நெல்லை மாவட்டத்தில் தொகுதிவாரியான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு படி புதிதாக 8 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

துபாய் எக்ஸ்போவில் ஐலேசா-வை அறிமுகப்படுத்திய ஆழி செந்தில்நாதன்

Arivazhagan CM

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

Halley Karthik

துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்!

Gayathri Venkatesan