சாதி பிரச்னை காரணமாக, ஆசிரியர் ஒருவர் தினமும் 150 கி.மீ பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரியாலா கிராமத்தைச் சேர்ந்த வர் கன்னையாலால் (50). ஆசிரியரான இவர், அதே மாவட்டத்தில் உள்ள நினமா கிராமத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இடம் மாற்றம் செய்யப்பட்டார். இது அவருடைய சொந்த ஊரில் இருந்து 75 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இவர் பணியில் சேர்ந்த அன்றே அந்தப் பகுதியில் வாடகைக்கு வீடு தேடத் தொடங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரிடம் விசாரித்தவர்கள், என்ன சாதி என்று கேட்டுள்ளனர். அவர் பட்டியலினத்தவர் என்பதால் யாரும் வாடகைக்கு வீடு தரவில்லை. இதனால், தினமும் 150 கி.மீ பயணித்து பள்ளிக்கு வந்துகொண்டிருக்கிறார். வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து சமூக நீதி மற்றும் கல்வித்துறைக்கு அவர் புகார் அனுப்பினார். ஆனால், பதில் ஏதும் கிடைக்க வில்லை. இதற்கிடையே, அவரை இடமாற்றம் செய்யுமாறு சமூக நீதித்துறை கடந்த வாரம் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.
இதுபற்றி கன்னையாலால் கூறும்போது, ’என் நிலைமை குறித்து முதலமைச்சர் புபேந்திர படேலுக்கும் தெரிவித்தேன். என்னை டிரான்ஸ்பர் செய்துவிடுமாறும் அவரிடம் கூறியிருந் தேன். அந்த விவகாரத்தை நான் கவனித்துக்கொள்கிறேன் என்று சொன்னார்’ என்றார்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அம்ருதேஷ் அவுரங்காபத்கரிடம் கேட்டபோது, தற்போது விடுமுறையில் இருப்பதாகவும் இந்த விஷயம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பட்டியலின சமூக ஆர்வலர்கள் கூறும்போது, சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது இங்கு சகஜம்தான் என்றும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளனர்.