கச்சத்தீவு இலங்கையுடையது என்று அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டிச.28-ம் தேதி உயிரிழந்தார். அவர் உடலுக்கு தமிழ்நாட்டின் கடைகோடி கிராமங்களில் இருந்து கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் என பல்லாயிரம் பேர் சென்னை வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். அதே போன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படியுங்கள்: சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை: நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வேண்டுகோள்!
இந்த நிலையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தாளர்களை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியதாவது:
தேமுதிக கட்சித் தொண்டர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். தலைவன் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் கேப்டன். இலங்கை தமிழர்களை வைத்து எல்லாம் அரசியல் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தீர்வு கொடுக்க யாரும் முன்வரவில்லை.
கஷ்டத்தில் யாரு வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர் கேப்டன். கடந்த முறை வந்தபோது முதலமைச்சரை சந்தித்து, மீனவர்கள் பிரச்னை தொடர்பாக எடுத்துரைத்தேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கச்சத்தீவு இலங்கை உடையது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.







