இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துள்ளனர் என அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.பி.அன்பழகன், காரிமங்கலம், நாகனம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிக்க சென்ற அவரை ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் மக்கள் வரவேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என பள்ளிகளை தரம் உயர்த்தியது அதிமுக ஆட்சியில் தான் என்றார். மேலும், தமிழகத்தில் இதுவரை 52 லட்சத்து 31 ஆயிரம் மாணவ மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது எனவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பரப்புரையில் கூறினார்.







