முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவியின் பிரேத பரிசோதனை-ஆய்வு செய்ய ஜிப்மருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மறு உடல்கூறாய்வு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகலையும் காவல் துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சம்பந்தப்பட்ட பள்ளியில் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? உடல் எப்போது வாங்கப்படும்? என மாணவியின் தந்தை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் 4500 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது”என்று நீதிபதி கவலை தெரிவித்தார்.

இதையடுத்து, மாணவர்களின் கல்வியை மீட்டெடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளார் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாட்ஸ் அப் குழுவில் அனைவரும் தடவியல் நிபுணர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் ஆகிவிட்டனர். வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை. உடலை பெற வேண்டும் இல்லையென்றால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அந்த பள்ளியின் மாணவர்களில் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். உடலை பெற்றுக் கொள்வதில் இன்றுக்குள் முடிவு எடுக்க வேண்டும். மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகிறார்கள். அது உங்களுக்கு தெரியாமல் நடந்துள்ளது. என்ன நடந்தது என தெரியாமல் வாட்ஸ் அப் குறிப்பில் வதந்திகளை பரப்பவேண்டாம்.

கண்ணியமான முறையில் இறுதி சடங்கை நடத்துகள். அந்த ஆன்மா இளைபாரட்டும் என்று நீதிபதி கோரினார்.

அப்போது, ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு தங்களுக்கு வேண்டும் என மாணவியின் தந்தை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதி கூறியதாவது:

தகுதியான தடவியல் நிபுணர் கொண்டு இந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பிரேத பரிசோதனை அறிக்கைகளை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உத்தரவு. மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை” என்றார்.

ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர் சாந்தகுமார் நீதிபதி முன் ஆஜராகி மறு உடரகூராய்வு குறித்து விளக்கம் அளித்தார்.

இரு உடற்கூறாய்வு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பிரேத பரிசோதனையின் போது எதுவும் புதிதாக கண்டு பிடிக்கவில்லை என்றார் அவர்.

அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா இல்லையா  என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை அமைந்தகரை கந்தசாமி கல்லூரி மாணவர்கள் மற்றும் கீழ்பாக்கம் பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட போவதாக வாட்ஸ் அப் குழுக்களில் தகவல் பரவியது.

இதனையடுத்து இரண்டு கல்லூரிகளுக்கும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு சைபர் கிரைம் உதவியுடன் அழைப்பு விடுத்த மாணவர் யார் என விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பச்சையப்பன் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவரை கீழ்ப்பாக்கம் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாகவும் மற்றும் கலவரம் தொடர்பாகவும்
யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் பொய்யான தகவல் பரப்பியவர்களை கண்டறிந்து 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும் பணி தொடங்கியிருப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் தகவல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு

Arivazhagan Chinnasamy

தமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்!

Niruban Chakkaaravarthi

இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

EZHILARASAN D