கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு- உயர்க்கல்வித்துறை

அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளதாக உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள…

அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளதாக உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட கால தாமதமானது.

சிபிஎஸ்இ பள்ளிகளிடம் இருந்து பொதுத்தேர்வு முடிவுகளை சேகரிப்பதால் முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மிக விரைவில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சிபிஎஸ்இ பிளஸ் 2க்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மொத்தம் 92.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவனந்தபுரம் முதல் இடத்தையும், பெங்களூரு 2ம் இடத்தையும், சென்னை 3ம் இடத்தையும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அரசு கலை –அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. CBSE முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கடந்த 8ந்தேதி தெரிவித்திருந்தார். மேலும் இதுவரை 3 லட்சத்துக்கும் மாணவர்கள் அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பத்தற்கான கால அவகாசம் வரும் 27ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.