சிம்பு- கவுதம் படத்தில் இணைந்தார் எழுத்தாளர் ஜெயமோகன்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில், எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில், மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இதில் கல்யாணி பிரிய தர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி உட்பட…

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில், எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில், மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இதில் கல்யாணி பிரிய தர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு ஓசூர் அருகே நடந்தது. அதோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது. கடைசி நாள் ஷூட்டிங் அன்று படக்குழு வினருக்கு பரிசு கொடுத்து ஹீரோ சிம்பு அசத்தினார்.

இந்தப் படத்தை அடுத்து அவர், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்தில் நடிக்கிறார். கவுதம் மேனன்-சிம்பு கூட்டணி இதற்கு முன் விண் ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் இணைந்தது. இப்போது மூன்றாவது படத்தில் இணைகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் இப்போது எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளார். அவர் வசனம் எழுத இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.