’நான் வெற்றி பெற்றவுடன் வந்த வலிமை அப்டேட்’- வானதி சீனிவாசன் ட்வீட்

தான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

தான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தான் வெற்றி பெற்ற உடன் வலிமை அப்டேட் வந்துவிட்டது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின் போது, வானதி சீனிவாசனிடம் சிலர் வலிமை அப்டேட் குறித்து கேட்டனர். அப்போது, தாம் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் கிடைக்கும் என்று வானதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வலிமை அப்டேட் வந்திருப்பது குறித்து அவர் ட்விட்டரில் இவ்வாறு கருத்து பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.