மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண் அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வீட்டில் தேநீர் விருந்தளித்துள்ளார்.
பிரதமர் மோடி 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக் கப்படவில்லை. இதற்கிடையே, சில நாட்களுக்கு முன், மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.
அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 அமைச்சர்கநிள் பதவியேற்றனர். இதில் 7 பேர் பெண்கள். இதையடுத்து மத்திய அமைச்சரவையில் மொத்தம் 11 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி இணை அமைச்சர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் ஆகியோருடன் புதிதாக, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், பிரதிமா பவுமிக், ஷோபா கரண்ட்லாஜ், பாரதி பவார், மீனாட்சி லேகி, அனுபிரியா படேல், அன்னபூர்ணதேவி ஆகியோர் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், புதிய பெண் அமைச்சர்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தேநீர் விருந்தளித்தார். நிர்மலா சீதாராமன் இல்லத்தில் இந்த தேநீர் விருந்து நடைபெற்றது.







