தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,775-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,800-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




