ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்காக வங்கிக்கடன் வழங்கும் அரசு விழா இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. பெருந்துறை 4 வழிச்சாலை காஞ்சிக்கோ வில் ரோட்டில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணா மகாலில் நடை பெறும் இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வங்கிக்கடன் மற்றும் ரூ.1,110 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள மகளிர் குழுவினர் அமைத்துள்ள கண்காட்சி அரங்கினையும் முதலமைச்சர் விஜய் பார்வையிடுகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ஈரோடு வருகிறார். இந்த நிலையில் கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் விழாவையொட்டி ஈரோட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




