ஜெயம் ரவியின் ‘சைரன்’ பட டீசர் வெளியானது!

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள  “சைரன்” படத்தின் டீசர் வெளியானது. Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரான நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக…

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள  “சைரன்” படத்தின் டீசர் வெளியானது.

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரான நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்திலிருந்து, ஜெயம் ரவி கதாப்பாத்திரத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். மேலும் இதில் யோகி பாபு, சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2 தோற்றங்களில் ஜெயம் ரவி நடித்துள்ள இந்த திரைப்படம் குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே ஒழிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி.

அண்மையில் அவரது பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு பிரத்தியேக விருந்தாக, சைரன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.