பொன்னியின் செல்வனால் எகிறிய ஜெயம் ரவியின் மார்க்கெட்!

ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட், பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு பிறகு தற்போது எகிறியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தில்…

ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட், பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு பிறகு தற்போது எகிறியுள்ளது.

சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கதையின் நாயகனாக, பொன்னியின் செல்வனாக, சிறப்பான நடிப்பை நடிகர் ஜெயம் ரவி வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தனக்கு ஏற்ற ஸ்க்ரிப்டுகளை தேர்வு செய்து நடிக்கும் ஜெயம் ரவி, ஒவ்வொரு படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து, அவர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில், இயக்குநர் கல்யான் கிருஷ்ணன் இயக்கத்தில் ’அகிலன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு பிறகு ஜெயம் ரவியின் மார்க்கெட் தற்போது எகிறியுள்ளது. அகிலன் படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளம் ஒன்று ரூ.30 கோடிக்கும் மேல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் ஜெயம்ரவி நடித்த ஆடை விளம்பரத்திற்கு, அவர் 5 கோடி ருபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.