முக்கியச் செய்திகள் தமிழகம்

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடும் ஜெயலலிதாவின் கார்! – வியப்பில் ஆழ்த்தும் அதிமுக தொண்டர்!!

ஜெயலலிதா பயன்படுத்திய காரை பராமரித்து, அதிமுகவின் நலத்திட்ட பணிகளுக்காகவும், பிரச்சாரங்களுக்கும் பயன்படுத்தி வருகிறார் முருகன் என்ற அதிமுக தொண்டர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கார்கள் மீது அதீத நாட்டம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2000 ஆம் ஆண்டு அதிமுக தலைமை கழகம் சார்பில் டாடா சுமோ கார் பரிசாக வழங்கப்பட்டது. ஜெயலலிதா பிறந்த ஆண்டான 1948 என்பதை வைத்து இந்த வாகன எண் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

3 மாதம் பயணம் செய்ததற்கு பின்னர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஜெயலலிதா இந்த காரை வழங்கி உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு வரை இந்த வாகனத்தை திண்டுக்கல் சீனிவாசன் பயன்படுத்தி வந்தார். ஜெயலலிதா பெயரில், அவரது படம் பொருந்திய பதிவுச் சான்றிதழ் உள்ளது. இதனை, திண்டுக்கல் சீனிவாசன் தனது பெயருக்கு மாற்றம் செய்து பயன்படுத்திய பின்னர், மாதவரம் பாடியநல்லூரை சேர்ந்த முருகனுக்கு வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள் : கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா? – ஆளுநருக்கு ராமதாஸ் கண்டனம்

2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் அன்று, தனது பெயருக்கு மாற்றம் செய்து, இன்று வரை அந்த காரை முருகன் பராமரித்து பயன்படுத்தி வருகிறார். இதற்கு தங்கத்தாரகையின் தங்கரதம் என பெயரும் வைத்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முதல் முறையாக, அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டி, இந்த காரை பிரச்சாரத்திற்காக பயன்படுத்தினார்.

இந்த வாகனத்தை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு கொண்டு செல்வதாகவும், தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வாகனத்தை பார்வையிட்டு வருவதாகவும் முருகன் தெரிவித்துள்ளார். மேலும், நலத்திட்ட உதவிகள் பெறும் முதியவர்கள், பெண்களை நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்வது, அம்மா உணவகங்களுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் இந்த காரின் மூலம் முருகன் செய்து வருகிறார்.

மேலும், ஜெயலலிதா அமர்ந்த முன் இருக்கையில் தனது குடும்பத்தினரை கூட அமர்த்தி
பார்க்க மனமில்லாமல், அந்த இருக்கையில் ஜெயலலிதா படத்தை வைத்துள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த காரை அதிமுக தொண்டர்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்ட மேற்படிப்புகள் இந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும்: வெங்கைய்யா நாயுடு

Niruban Chakkaaravarthi

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்; ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு

Arivazhagan Chinnasamy

புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைப்பு

G SaravanaKumar