கோடநாடு விவகாரம் தொடர்பான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி, முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று முதல் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர், கோடநாடு விவகாரத்தை முதன்முதலாக சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்ததே அதிமுகவினர்தான் என்றார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேண்டு மானால் அவசரம் இல்லாமல் இருக்கலாம் என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவின் உண்மை தொண்டர்கள் கோடநாடு விவகாரம் குறித்து கேட்பதாகக் குறிப்பிட்டார்.
கோடநாடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிப்பதில் எந்த வித பழிவாங்கும் நடவடிக்கையோ, அரசியல் உள்நோக்கமோ இல்லை என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.