ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் 23-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகரும், தற்போதை தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் நடித்து, ஹெச்.வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படம் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டது. இப்படம் இநத் ஆண்டு ஜனவரி மாதம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் தணிக்கை சான்று கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இப்படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தணிக்கை சான்று வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடியது.

இதனையடுத்து முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை சான்று கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்ததால் படக்குழு மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு சைபர் க்ரைம் போலிசார் 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தணிக்கைக் குழு ஜனநாயகன் திரைப்படத்திற்கு ‘ஏ சான்றிதழ்’ வழங்கிய நிலையில், ஜனநாயகன் திரைப்படம் வரும் (ஜூலை) 23-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.