இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுறுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 4-வது ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அனி முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதலில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான சாஞ்சு சாம்சன் 4 ரன்களிலும், அபிஷேக் ஷர்மா ஒரே ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத்தொடர்ந்து கைகோர்த்த ஷ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் இணை அதிரடியாக ஆடி பந்துகளை நாளாபுறமும் சிதறடித்தனர். இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 ஃபோர்கள் அடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து ஷ்ரேயஸ் அய்யர் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து வந்த 6 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய நமன் திர் 33 ரன்களிலும், நிதிஷ்குமார் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.




