விரைவில் வெளியாகும் ‘ஜனநாயகன்’ – படக்குழு அறிவிப்பு!

நடிகர் விஜய்யின் ஜனநாயக் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நடிகரும், தற்போதை தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் நடித்து, ஹெச்.வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படம் முதலமைச்சர் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டது. இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் தணிக்கை சான்று கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தணிக்கை சான்று வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடியது.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்ததால் படக்குழு மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு சைபர் க்ரைம் போலிசார் 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தணிக்கைக் குழு ஜனநாயகன் திரைப்படத்திற்கு ‘ஏ சான்றிதழ்’ வழங்கியுள்ளது. மேலும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.