வியட்நாம் : சுற்றுலா சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

வியட்நாமில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வியட்நாம் நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட 32 சுற்றுலா பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் வியட்நாமின் ஹு கியுஹ் தீவுக்கு 35 பேர் இன்று காலை 11 மணியளவில் படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

அப்போது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் 18 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.