தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவாரான விஜய், தவெக என்னும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து விஜயின் கடைசி படமான ஜனநாயகன் பொங்களுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது.
ஜன நாயகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தை தடுக்கும் முயற்சியானது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜன நாயகன்’ திரைப்படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மேற்கோள்ளும் முயற்சியானது, தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும். தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் MR. மோடி” என்று தெரிவித்துள்ளார்.
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
— Rahul Gandhi (@RahulGandhi) January 13, 2026
ஏற்கெனவே மெர்சல் பட விவகாரத்தின் போது விஜய்க்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







