ஜம்மு காஷ்மீரில் உள்ள சபர்வான் மலைப்பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய டியூலிப் மலர் தோட்டத்தில் 15 லட்சம் டியூலிப் மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
சபர்வான் மலைப்பகுதியில் 64 வகையான 15 லட்சம் டியூலிப் மலர் வளர்க்கப்படுகிறது. தற்போது இந்த டியூலிப் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக இந்த டியூலிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில்,“பொதுமக்கள் யாருக்காவது ஜம்மு காஷ்மீர் சென்றால் கண்டிப்பாகப் பூத்துக் குலுங்கும் டியூலிப் மலர்களை காணத்தாவராதீர்கள். இந்த அழகான மலர்களைக் காணும்போது ஜம்மு காஷ்மீர் மக்களின் அன்பை உங்களால் உணரமுடியும்” எனக் கூறியுள்ளார்.







