கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஒத்திவைத்தது.
இந்த முடிவை எதிர்த்து தச்சங்குறிச்சி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி போட்டி நடைபெறும் பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை களையும்படி அறிவுறுத்தினர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் வரும் ஜனவரி 8ம் தேதி தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று கோட்டாட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.







