மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

சிவகங்கை மாவட்டம், புதூர் கிராமத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. டி.புதூர் கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில்…

சிவகங்கை மாவட்டம், புதூர் கிராமத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

டி.புதூர் கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு கொண்டு அடக்கினர்.

ஜல்லிக்கட்டி போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் கிராமத்தினர் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் 6 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் களமிறக்கப்பட்டன. போட்டிப்போட்டு அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.