பிரதமர் நரேந்திர மோடி மாண்டியா மக்கள் அளித்த அருமையான வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசின் பதவி காலம் வரும் மே 23-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் கர்நாடக சட்டசபைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள், கர்நாடக மாநிலத்திற்கு அவ்வப்போது வருகை தந்து, அரசியல் தொடர்பாக சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதோடு, புதிய திட்டங்களை தொடங்கி வைப்பது, அடிக்கல் நாடுவது என்று பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கனவே புதிய விமான நிலையம் திறப்பு, சாலை பாதுகாப்பு திட்டங்கள் தொடங்கி வைப்பது என்று 4 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது 5-வது முறையாக கர்நாடக மாநிலம் மாண்டியாவிற்கு வருகை தந்துள்ளார். மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கர்நாடக மாநிலம், மாண்டியாவிற்கு, வருகை தந்தார்.
அப்போது சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் பின்தொடர்ந்து வந்த பிரதமரின் காருக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். காரின் கதவருகே நின்றவாரு தொண்டர்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாண்டியா மக்களின் அருமையான வரவேற்புக்கு நன்றி, மாண்டியா என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ಸಕ್ಕರೆ ನಗರ ಮಂಡ್ಯದ ಕಬ್ಬು ಬೆಳೆಯುವ ರೈತರ ಬದುಕು ಸುಧಾರಣೆಯಾಗಿರುವುದು ಹೀಗೆ… pic.twitter.com/iEMLdmmPld
— Narendra Modi (@narendramodi) March 12, 2023
- பி.ஜேம்ஸ் லிசா