#Jaipur | தீப்பிடித்த நிலையில் சாலையில் ஓடிய கார் – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

ஜெய்ப்பூரில் கார் எரிந்தவாறு சாலையில் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் உள்ள உயர்மட்ட சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரியத்…

ஜெய்ப்பூரில் கார் எரிந்தவாறு சாலையில் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் உள்ள உயர்மட்ட சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை கவனித்த டிரைவர், உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். ஆனால் டிரைவர் இறங்கிய பின்னரும் அந்த கார் தீப்பற்றியபடி நகரத் தொடங்கியது.

இதனால் அருகில் இருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கார் தங்களை நோக்கி வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் அங்கிருந்து நகர்ந்தனர். தீப்பிடித்தவாறு, கரும்புகையுடன் சிறிது நேரம் சென்ற கார், பாலத்தின் மறுபகுதி வரை சென்று டிவைடரில் மோதி நின்றது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீப்பிடித்த கார் சென்றபோது அந்த சாலையில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மின்கசிவு காரணமாக கார் தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.